அம்பாறையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதி! மக்கள் வெளியிட்ட விசனம்
கல்முனை(Kalmunai) மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், குன்றும் குழியுமாக காணப்படுப்படும் வீதியை யார் புனரமைப்பது என அங்குள்ள பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெரிய நீலாவணை முதல் நிந்தவூர் வரையிலான பொதுமக்கள் இக்கரையோர வீதியினை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ் வீதியானது பாண்டிருப்பு எல்லையுடன் கரையோர வீதி இணையும் பகுதியில் இருந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விசனம்
இதனால் குறித்த இந்த வீதியினால் பயணம் மேற்கொள்ளும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தவிர இவ்வீதி ஊடாக அன்றாடம் அரச, தனியார் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பாதையினை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மழை காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதனால் இவ்வீதியால் செல்கின்ற மக்கள் பல்வேறு விபத்துகளுக்கு முகம் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த வீதி புனரமைப்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
