11 வயது சிறுமதிக்கு நிகழ்ந்த கொடூரம்

Colombo Sri Lanka
By Nafeel May 12, 2023 06:34 AM GMT
Nafeel

Nafeel

கொழும்பில் சிறுமியை யாசகம் பெற வைத்து வருமானம் ஈட்டிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒபேசேகரபுர கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் பெண் ஒருவர் சிறுமியை யாசகம் பெறுவதற்காக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் 11 வயதான சிறுமி யாசகம் பெற்று வந்த நிலையில் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளர்.

குறித்த சிறுமி அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், நிலுகா பிரியதர்ஷனி என்ற பெண், சிறுமியை அங்கிருந்து அழைத்து சென்று தனது மகனுடன் சேர்ந்து பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளதாக சிறுமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த பெண் ஹெரோயின் போதைப் பொருளுக்காக பிச்சை எடுப்பதற்காக சிறுமியை அழைத்துச் செல்லப்படுவதாகவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமியின் வாய், உதடுகள், இடது காலின் முழங்காலுக்கு மேல் மற்றும் இரு கால்களின் பெருவிரல்களிலும் தீக்காயங்கள் காணப்பட்டதையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அதன்படி, சிகிச்சை அளித்த பிறகு சிறுமியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

சிறுமியை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பேலியகொட நுகே வீதியைச் சேர்ந்த நிலுகா பிரியதர்ஷனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.