15 வயது சிறுவன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை
Sri Lanka
By Nafeel
வீட்டில் இருந்த சட்டவிரோத துப்பாக்கியினால் 15 வயது பாடசாலை மாணவன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பாறை, மாயதுன்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவன், வீட்டின் பின் புறத்திற்குச் சென்று இவ்வாறு சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பொலிசார் காரணமறிய விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.