தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் விரைவில்

Namal Rajapaksa Rajapaksa Family Sunil Watagala Wasim Thajudeen
By Faarika Faizal Oct 08, 2025 08:13 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

அந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

குறிப்பிட்ட ஒரு குடும்பமே கலக்கத்தில்

அவர் மேலும் கூறுகையில், "வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே சிலர் கலக்கமடைந்துள்ளனர்.

தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் விரைவில் | Thajudeens Murder To Be Revealed Soon Anura Gov

இந்தக் கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படும்.

குறிப்பிட்ட ஒரு குடும்பமே இவ்வாறு அளவுக்கதிக கலக்கத்தில் உள்ளது. அந்தக் குடும்பம் ராஜபக்ஷ குடும்பமா அல்லது வேறு குடும்பமா என்பதை எம்மால் கூற முடியாது.

ஆனால், விசாரணைகளுக்கமைய உண்மைகள் வெளிப்படுத்தப்படும். கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படும்.

மேலதிக விசாரணை

அவ்வாறான வாக்குமூலங்களில் இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும்.

தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மைகள் விரைவில் | Thajudeens Murder To Be Revealed Soon Anura Gov

யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. விசாரணைகள் மூலம் நிச்சயம் நாட்டுக்கு உண்மைகள் வெகுவிரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW