தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Wasim Thajudeen
By Fathima Nov 19, 2025 05:34 AM GMT
Fathima

Fathima

தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை. அது இயற்கையான மரணம் அல்லவென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(18) உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரித்துள்ளார்.

தாஜுதீனின் கொலை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை | Thajudeen Murder Case

இது தொடர்பில் கடற்படையின் சில அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுடன் இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளேன்.

இது இயற்கை விபத்தா? அல்லது கொலையா? விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தின் உண்மைகளும் இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த கால குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் செய்யும் போது அதில் பாதுகாப்பு படையினரும் விசாரிக்கப்படுவார்கள்.

இதனை காரணமாக கொண்டு இராணுவத்தினருக்கு எதிராக அரசு செயற்படுவதாக விமர்சனம் செய்யாதீர்கள் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எக்னலிகொட கொலை மற்றும் கடந்த காலத்தில் நடந்த ஈஸ்டர் தாக்குதலை நாம் விசாரிக்க வேண்டும்.

விமர்சனம் செய்யாதீர்கள்

அது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் உண்மைகள் நீதிமன்றம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை! ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை | Thajudeen Murder Case

கடந்த கால ஆட்சியின் போது குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொண்டு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.