துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி: அமெரிக்காவில் சோகம்
அமெரிக்காவின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் என்ற நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றைய தினம் (06.05.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இதக்போது வணிக வளாகத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை
இச்சம்பவத்தில் மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாகிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டெக்சாஸ் மாநில பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை
டெக்சாஸ் மாநிலத்தில் எந்த வித பயிற்சியும் உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளச் சட்டம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குரல் எழுந்து வருகின்றது.
எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |