இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட மொயீன் அலி
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, தனது முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலமுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மொயின் அலி, தனது முடிவை திரும்ப பெறுவதாக தெரிவித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர்
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ்(Ashes) தொடரிலும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொயின் அலி, 2014 முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றார்.
இந்நிலையில் மொயின் அலியின் வருகை இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.