தெற்கு அதிவேகப் பாதையில் பயங்கர விபத்து ! 12 பேர் காயம்
தெற்கு அதிவேகப் பாதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து காரணமாக பன்னிரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை , அக்குரஸ்ஸை பாதையில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று தெற்கு அதிவேகப் பாதையின் பாலட்டுவ இடைமாறல் அருகே பாதையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
12 பேர் காயம்
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் வான் சுக்குநூறாக நொறுங்கியுள்ளதுடன், அதில் பயணித்த 12 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள்.
காயமடைந்தவர்கள் தற்போதைக்கு மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் சென்று வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாத்தறை, முலட்டியனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |