யுக்திய நடவடிக்கைகள் நிறுத்தம்

By Mayuri Sep 29, 2024 06:23 AM GMT
Mayuri

Mayuri

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிஸார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யுக்திய நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

திறனுடன் செயல்பாடு

அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன் செயல்படுவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கைகள் நிறுத்தம் | Termination Of Yukthiya

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது எனவும், அந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாக குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW