சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறைவழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07.09.2023)) முதல் மோசமான காலநிலை குறையும் வரை விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள்
இதற்கமைய, புலத்சிங்கள ஹல்வதுர தமிழ்க் கல்லூரி, பரகொட கித்துலகொட கனிஷ்ட கல்லூரி, மேல் வெல்கம கனிஷ்ட கல்லூரி, மத்துகம பிரதேசத்தின் மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த (04.09.2023)ஆம் திகதி தொடக்கம் மழை ஆரம்பிக்கும் நேற்றைய தினம் (07.09.2023)ஆம் திகதி வரை வெள்ள நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இல்லை என புலத்சிங்கள பிரதேச செயலாளர் ரங்கன பிரசாத் பெரேரா தெரிவித்துள்ளார்.