தெலுங்கானாவின் முதல் முஸ்லிம் அமைச்சராக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

India Indian Cricket Team
By Faarika Faizal Oct 31, 2025 04:55 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார்.

ராஜ்பவனில் இன்று (31.10.2025) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் பொலித்தீன் பைகளுக்கான கட்டணம்

நாளை முதல் நடைமுறைக்கு வரும் பொலித்தீன் பைகளுக்கான கட்டணம்

30% முஸ்லிம் வாக்காளர்கள்

இதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் சுமார் 30% முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தபோதிலும், முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாதிருந்தது.

தெலுங்கானாவின் முதல் முஸ்லிம் அமைச்சராக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் | Telangana S First Muslim Minister

எனினும், இந்த நியமனத்திற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது 62 வயதாகும் அசாருதீன், 1984 முதல் 2000 வரையான காலப்பகுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.  


பப்ஜி விளையாட்டிற்கு அடிமை : உயிரை மாய்த்த இளைஞன்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமை : உயிரை மாய்த்த இளைஞன்

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல்

இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW