நீராடச் சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி! காப்பாற்ற சென்ற 12 வயது சிறுவன் மாயம்

Sri Lanka
By Fathima May 06, 2023 09:31 PM GMT
Fathima

Fathima

மதுரத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்பிட்டிய பகுதியில் பெலிஹுல் ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், 12 வயது சிறுவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார். 

நேற்று (06.05.2023) பிற்பகல் இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

நீராடச் சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி! காப்பாற்ற சென்ற 12 வயது சிறுவன் மாயம் | Teenage Girl Drowns Missing In Mathurata

நீராடும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை மீட்க சிறுவன் முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், மதுரத்தை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.