ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்

Department of Examinations Sri Lanka Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Thulsi Oct 26, 2023 12:18 AM GMT
Thulsi

Thulsi

தென் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 இற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, விண்ணப்பதாரி 18 தொடக்கம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்


பொதுச் சேவை ஆணைக்குழு 

இதன்படி விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகமையாக, க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல் | Teaching Vacancies For Southern Province

மேலும், தமது பட்டத்துடன் இணைந்ததாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்களில் மூன்று பாடத்திற்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அண்மித்த ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரிகள் அல்லது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு ஆகக் குறைந்தது முன்னைய மூன்று வருடங்கள் அல்லது அதற்கு கூடியகாலம் கணவன் அல்லது மனைவி தென் மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த பட்டதாரிகளுக்கு இதற்கு விண்ணப்பிக்க முடியும்

இவ்வாறு, இம்முறை மொத்தம் 56 பாடங்களுக்கு தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொது செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்....! இஸ்ரேல் கோரிக்கை

ஐ.நா. பொது செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்....! இஸ்ரேல் கோரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை: மனதை உருக்கும் சம்பவம்

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை: மனதை உருக்கும் சம்பவம்