ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சென்றிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7000 - 17000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு சம்பள அதிகரிப்பு
அத்தோடு கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது. அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும்.
எனினும் 2025ஆம் ஆண்டு ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |