அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம் (Photos)

Ranil Wickremesinghe SL Protest Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Madheeha_Naz Oct 27, 2023 06:38 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அதிபர், ஆசிரியர்கள் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் யாழில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டங்கள் இன்று (27.10.2023) யாழ். பாடசாலைகளுக்கு முன்பாக இடம்பெற்றது.

அதிபர், ஆசிரியர்களின் உரிமையை வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அரசால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டம்

இதற்கமைய பாடசாலைகள் முடிவடைந்த பின்னர் யாழிலுள்ள பாடசாலைகள் முன்பாக அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அரச வன்முறைகளுக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம் (Photos) | Teachers Protest In Jaffna

இதன்போது, "ரணில் - ராஜபக்ச அரசால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டிக்கின்றோம்", "ஆசிரியர் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்காதே"

"வாக்குறுதி கொடுத்த சம்பள உயர்வை வழங்கு", "மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்காதே" உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.