நிந்தவூரில் போதனாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

Ampara Sri Lankan Peoples SL Protest Nintavur
By Rakshana MA Feb 18, 2025 05:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழி மூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தின் போது மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

இடம்மாற்றக் கோரிக்கை 

இதன்போது, பிரதிப் பணிப்பாளர் ரி. வினோதராசாவின் நிர்வாக முறைமையில் அதிருப்தி அடைந்த சகல உத்தியோகத்தர்களும் அவரை உடனடியாக இடம்மாற்றக் கோரி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை ஒருங்கிணைந்த சுதந்திர தொழிற்சங்க செயலாளர் நிஹால் விதானகேவின் வழிகாட்டுதலில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நிந்தவூரில் போதனாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் | Teachers And Officials To Protest At Nintavur

மேலும், இப் பிரதிப் பணிப்பாளர், அவரின் கடந்த சேவைக்காலங்களில் பல தண்டனை மற்றும் இடம்மாற்றங்களை பெற்றிருப்பதோடு பலதரப்பட்ட நிர்வாக முறைமை மற்றும் நிதி தொடர்பான குற்றங்களுக்காகவும் இடம் மாற்றங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

சாதாரணதர பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

சாதாரணதர பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery