ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை முடக்கும் ரணில் - ராஜபக்ச அரசு
அதிபர் - ஆசிரியர் சங்கத்தின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்காது அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இனவாத ரீதியிலான பிரச்சனைகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரணிலின் குறித்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (09) யாழ்ப்பணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் ராஜபக்ச அரசாங்கம் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை முடக்கியதாக குறிப்பிட்டார்.
மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களை பாதுகாத்துக் கொண்டு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு முன்வரவில்லை.
ரணில் விக்ரமசிங்க எமது போராட்டம் தொடர்பாக தமிழ் பாடசாலைகளில் எவ்வித போராட்டமும் இடம்பெறவில்லை இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தொடர்ந்து நமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.