மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

Batticaloa Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Rakshana MA Mar 18, 2025 04:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காமலிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கல்வி வலயத்திற்குப்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பொறுப்பில் இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் மாணவர்களுக்காக தேசிய அடையான அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தீர்வு கிட்டுமா??

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தீர்வு கிட்டுமா??

பரீட்சை

எனினும் மாணர்கள் நேற்றைய தினம் (17.03.2025) பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களின் கரங்களுக்கு தேசிய அடையாள அட்டை கிடைத்திருக்கவில்லை.

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Teacher Mistake For Applying Id Card For Exam

இதனையறித்த பெற்றோர் குறித்த பாடசாலை அதிபரையும், ஏனைய ஆசிரியர்களையும் தொடர்பு கொண்டதற்கிணங்க வெள்ளிக்கிழமையன்று குறித்த ஆசிரியரின் வீடு தேடிச் சென்ற அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பிறிதொரு ஆசிரியர் விடயங்களைக் கேடறிந்தபோது அவர் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்களை அவரது வீட்டிலேயே வைத்திருந்ததாக அதிர்சித் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் மக்களை அவமானப்படுத்தும் அர்ச்சுனா : அறிக்கையுடன் சபையில் ஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான்

தமிழ் மக்களை அவமானப்படுத்தும் அர்ச்சுனா : அறிக்கையுடன் சபையில் ஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான்

தற்காலிக அடையாள அட்டை

துரிதமாகச் செயற்பட்ட மற்றைய ஆசிரியர் அவரிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு அன்றையதினமே மாணவர்களுக்குரிய தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததற்கமைய மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Teacher Mistake For Applying Id Card For Exam

எனினும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் நிரந்தர அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு செயற்படும் ஆசிரியர்கள் மத்தியில் இவ்வாறான ஆசிரியருக்கு கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

களுவாஞ்சிக்குடியில் தாதி உத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

களுவாஞ்சிக்குடியில் தாதி உத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு

சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW