தமிழ் மக்களை அவமானப்படுத்தும் அர்ச்சுனா : அறிக்கையுடன் சபையில் ஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Mujibur Rahman Dr.Archuna Chavakachcheri
By Rakshana MA Mar 17, 2025 12:21 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanadan Archuna) வெளியிட்ட சில கருத்துக்கள், அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(17) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர், "இராமநாதன் அர்ச்சுனா இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுபிள்ளைகள் விவாகம் அதிகமாக முஸ்லிம் சமூகத்திலேயே இடம்பெறுவதாக குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந்த கருத்தில் அவர், நாட்டில் ஒரு சட்டம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில் 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களத்தினால், வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கையின் படி, 17 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் விவாகம், எல்லா சமூகத்திலும் நடந்திருக்கின்றது.

அதாவது, பெரும்பான்மையினத்தில், 69 வீதமும், தமிழர்கள் மத்தியில் 13 வீதமும், மலையக மக்கள் மத்தியில் 8 வீதம் மற்றும் முஸ்லிம் சமூகத்தில், 14 வீதம் என எல்லா சமூகத்திலும் இந்த சிறுபிள்ளைகள் விவாகங்கள் நடந்திருக்கின்றன.

தொடர்ந்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள்,

உச்சம் தொடும் தங்க விலை! இன்றைய நாளுக்கான நிலவரம்

உச்சம் தொடும் தங்க விலை! இன்றைய நாளுக்கான நிலவரம்

திருகோணமலையில் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருகோணமலையில் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW