கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேநீர் வழங்க ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி

Bandaranaike International Airport Colombo Sri Lanka
By Shalini Balachandran Jul 31, 2024 11:02 AM GMT

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேநீர் கடைகளை பராமரிப்பதற்கான கொள்வனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நாட்டிலிருந்து புறப்படும் விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தற்போது ஐந்து தேநீர் கடைகள் இயங்கி வருகின்றன.

தீவிரமடையும் டெங்கு நோயின் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தீவிரமடையும் டெங்கு நோயின் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய போட்டி ஏல முறை

குறித்த கடைகளை நடத்துவதற்கு தேசிய போட்டி ஏல முறையின் கீழ் ஏலம் கோரப்பட்டுள்ள நிலையில் அதற்காக எட்டு ஏலதாரர்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேநீர் வழங்க ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி | Tea Establishments At Katunayake Airport

இதடிப்படையில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின்படி, குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் விசேட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW