எரிபொருளுக்கான வரி விரைவில் குறையும்

Income Tax Department Value Added Tax​ (VAT) Nalinda Jayatissa
By Vethu Feb 18, 2025 10:56 AM GMT
Vethu

Vethu

இலங்கையில் எரிபொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து விரிவான அறிக்கை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளர்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எவ்வாறு நட்டத்தை சந்தித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான வரி விரைவில் குறையும் | Taxes On Fuel Will Be Reduced Soon Sri Lanka