மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு! ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரியை செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுபோன்று இதுவரை இருந்ததில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
14 துறைகள்
"கடந்த ஆண்டு, 14 துறைகள் வரி செலுத்துவதற்காக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என நாம் கொண்டு வந்தோம். பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் இந்த 14இல் உள்ளன.
எனவே, 14ன் மூலம் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்தும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது."
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |