பேரீச்சம் பழங்களுக்கான வரி குறைப்பு
வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கான வரியை குறைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake), வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கான வரிகள் சட்டத்தின் கீழ், இலங்கைக்கு தருவிக்கப்படும் பேரீச்சம்பழங்களுக்கு ரூ.200 வரியாக அறவிடப்பட்டு வருகின்றது.
எனினும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் முஸ்லிம்களின் ரமழான் மாத காலத்தை முன்னிட்டு, ரமழானுக்கு முன்னதாக பேரீச்சம்பழத்திற்கான வரி ஒரு ரூபாவாக குறைக்கப்படும்.
வரி குறைப்பு
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான வரியை அப்படியே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவும், அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம்பழங்களுக்கான வரியை ஒரு ரூபாவாக குறைத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளார். கடந்த 27ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரை இந்த வரி விலக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |