நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Madheeha_Naz Jun 25, 2024 05:42 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மீதி வரிப்பணம்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை அரசாங்கமாக தெளிவுபடுத்த வேண்டும்.

முதலாவதாக எமது நாட்டின் வரிச் சட்டத்தில் காணப்படும் மேன்முறையீட்டு உரிமை. அது முழு உலகத்திலும் உள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Tax Money Invested In Government Institutions

அரசாங்கத்தினால் குத்தகை செலுத்துமாறு குறிப்பிட்டால், சட்டத்தின் முன்னால் சென்று மேன்முறையீடு செய்ய அரசாங்கமாக இருந்தாலும் எங்களால் இதனை செலுத்த முடியாது என்று சட்டத்தால் நீதிமன்றத்திடம் செல்ல மக்களுக்கு உரிமை உள்ளது.

அவற்றில் உள்ளவை தான் தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது.

முயற்சி

இரண்டாவது அரசாங்க நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டிய வரி. எந்தவொரு மீதியாக வரியை அறவிடுவதற்கு அரசாங்கத்திற்குக் காணப்படும் சகல அதிகாரங்களும் இந்த யுகத்தை போல் இன்னொரு யுகம் இல்லை.

உலகில் ஆகக் குறைந்த வருமானம் கிடைக்கப்பெற்றாலும் ஏதோ ஒரு இடத்திற்கு வந்து நாட்டைக் கொண்டு செல்கிறோம்.

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Tax Money Invested In Government Institutions

அறவிடப்பட வேண்டியவற்றை அறவிடாது புதியவற்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக எதிர்க் கட்சியினர் தற்போது சொல்ல முயற்சிக்கின்றனர்.

அது ஒரு தர்க்கமாகும்.ஆம், அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை அரசாங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.