பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
Sri Lanka Bomb Blast
Sri Lanka Police
Sri Lanka
By Laksi
ஏழு வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஏழு வழக்கு
2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான விசாரணைகளையே இவ்வாறு துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |