ஐ.நா. மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டு

United Nations Sri Lankan Tamils Selvam Adaikalanathan Sri Lanka Politician
By Madheeha_Naz Jan 08, 2024 07:01 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

ஐ.நா. மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் காட்டமாக இருந்தாலும் அவை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சரியான நிலைப்பாட்டை ஐ.நா. எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று (7.1.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கை அரசால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் மோசமானதாகவே உள்ளது.

கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக உறுப்பினரின் நண்பர்

கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக உறுப்பினரின் நண்பர்

ஜனநாயகப் போராட்டங்கள்

அதன்மூலம் ஜனநாயகப் போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது.

ஐ.நா. மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டு | Tamils Losing Faith United Nation

இதற்கு நாம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைக் காட்டுவோம். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்படிப் பாய்ந்தது என்று நாம் பார்த்தோம்.

போராட்டங்களை முன்னெடுக்கும் போதும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நிலைப்பாடாக உள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

மனித உரிமைகள் சபை

எனினும், இலங்கை அரசு அதை ஏமாற்றி வருகின்றது. ஐ.நா. மீதும் எமது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள்.

ஐ.நா. மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டு | Tamils Losing Faith United Nation

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் காட்டமாக இருந்தாலும் அவை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சரியான நிலைப்பாட்டை ஐ.நா. எடுக்கவில்லை.

பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பது எமது மக்களின் கோரிக்கையாகவுள்ளது. எனவே, புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எம்மால் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலம் தோண்டி எடுப்பு

அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலம் தோண்டி எடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW