கிழக்கில் கடை அடைப்பு போராட்டம் : சுமந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

M A Sumanthiran Sri Lankan Peoples SL Protest Eastern Province
By Rakshana MA Aug 13, 2025 04:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு, கிழக்கில் 15 ஆம் திகதி முன்னெடுக்கவிருந்த கடை அடைப்பு போராட்டமானது, எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

மட்டு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்தார்.

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

கடை அடைப்பு போராட்டம்

மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும் சுமந்திரன் நேற்று (12) பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார்.

கிழக்கில் கடை அடைப்பு போராட்டம் : சுமந்திரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Tamil Party Hartal On Aug 18 At Eastern Sl

அதையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனும் நல்லூர் உற்சவ தினங்கள் குறித்தும் கலந்துரையாடிய பின்னர் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி கடையடைப்பை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை.

எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.  

கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா வரலாறு நூலுருவாக்கம்

கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா வரலாறு நூலுருவாக்கம்

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

பிரியந்த வீரசூரிய பொலிஸ் மா அதிபராக நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW