தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை

Rajinikanth Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Fathima May 30, 2023 08:56 PM GMT
Fathima

Fathima

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை | Tamil Actor Rajinikanth

பௌத்த தலங்களை ஆராய அழைப்பு 

இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை | Tamil Actor Rajinikanth

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தின்போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW