மாத இறுதியில் டொனால்ட் ட்ரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை: இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel World
By Fathima Dec 08, 2025 01:16 PM GMT
Fathima

Fathima

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஆனால் பன்னாட்டு பாதுகாப்புப் படைகள் காசாவில் நிறுத்தப்படுமா என்பது உட்பட பல முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில், ஜெருசலேமில் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் உடன் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, திட்டத்தின் இரண்டாம் கட்டம் எவ்வாறு அடையப்படுகிறது என்பதை உறுதி செய்வது என்பது குறித்து, இந்த மாத இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் முக்கியமான விவாதங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாத இறுதியில் டொனால்ட் ட்ரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை: இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு | Talks With Trump Soon Regard Second Phase Of Gaza

காசாவில் ஹமாஸ் ஆட்சியை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்புடன் விவாதிக்கவுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இற்கும் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது மாதத்தைத் தொடுகிறது, இருப்பினும் இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஒருவருக்கொருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர்.

ட்ரம்பின் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், இஸ்ரேல் காசாவின் 53 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, அத்துடன் காசாவில் போராளிகளால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது அடங்கியிருந்தது.