ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையை கொண்டாட பெண்களுக்கு தலீபான்கள் தடை

Sri Lanka Afghanistan Taliban War Afghanistan Taliban
By Fathima Apr 22, 2023 05:59 PM GMT
Fathima

Fathima

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையை கொண்டாட பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலானை ஆப்கானிஸ்தான், காமா மாகாணங்களில் பெண்கள் கொண்டாடக் கூடாதென ஆட்சி நடத்தி வரும் தலீபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த மாகாணங்களில் ஆண்கள், பெண்கள் பாகுபாடு இல்லாமல் நடந்துக் கொள்வதாலும், பெண்கள் ஹிஜாப் அணிய மறுப்பதாலும் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டுள்ளதோடு, பணிபுரியும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.