மிரிஹான பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்! ஒருவர் பலி - சந்தேகநபர் தப்பியோட்டம்

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Apr 23, 2023 06:13 PM GMT

மிரிஹான பகுதியில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோட்டே, மிரிஹான கல்வல, குடா லியனகே வீதியைச் சேர்ந்த டொன் சஜித் மதுசங்க (34) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிரிஹான தலைமையக பொலிஸார் விசாரணை

இன்று (23) போதையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கோட்டே மிரிஹான கல்வல வீதியில் வசிக்கும் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மிரிஹான தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.