ஐரோப்பாவில் இருந்து வவுனியா வந்த தமிழ் இளைஞனின் விபரீத முடிவு

Sri Lanka Police Vavuniya Switzerland
By Fathima Sep 21, 2023 12:59 PM GMT
Fathima

Fathima

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வவுனியா வந்த இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து வந்த 27 வயதான இளம் குடும்பஸ்தரே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இளைஞன் உயிர் மாய்ப்பு

சுவிஸில் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாக உறவினர்கள் தெரித்துள்ளனர்.

ஐரோப்பாவில் இருந்து வவுனியா வந்த தமிழ் இளைஞனின் விபரீத முடிவு | Swiss Boy Death In Vavuniya

அவரின் மரணம் குறித்து வவுனியா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.