அநுராதபுரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை உயிரிழப்பு
Anuradhapura
Sri Lanka
Elephant
By Laksi
அநுராதபுரம் (Anuradhapura)-மின்னேரியா, ரொட்டவெவ வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க 08 அடி உயரமுடைய யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அத்தோடு ,உயிரிழந்த யானையின் தந்தங்கள் 04 அடி 04 அங்குலம் உயரமுடையது ஆகும்.
உயிரிழப்பு
இந்த யானை சுமார் 25 வருடங்களாக மின்னேரியா மற்றும் கவுடுல்ல ஆகிய தேசிய பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |