க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக சந்தேகம்: விசாரணை கோரி முறைப்பாடு
2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே கசிந்ததாக கூறும் செய்திகள் குறித்து விசாரணை நடத்த கோரி, பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறையிட்டுள்ளது.
கடந்த வாரம் பிரதி பரீட்சைகள் ஆணையரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கசிந்த வினாத்தாள்
க.பொ.த உயர்தரப் பொருளாதார வினாத்தாள் கசிந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

முன்னதாக இந்த அறிக்கைகள் குறித்து உள்ளக விசாரணை நடத்தியதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியது.
விரிவான விசாரணை
எனினும் அத்தகைய சம்பவத்தை உறுதிப்படுத்த எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதனையடுத்தே, விரிவான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத்துறையிடம் முறையிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.