பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Sri Lanka Police Crime Drugs
By Faarika Faizal Oct 20, 2025 01:47 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் தயாரத்ன இன்று (20.10.2025) உத்தரவிட்டுள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது நபரொருவரின் கையடக்கத் தொலைபேசியை பலாத்காரமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட 26 வயது பொலிஸ் அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் | Suspended Police Constable

இதன்படி, இவர் புதுக்கடை பிரதேசத்தில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வாழைத்தோட்டம் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டோருக்கு நேர்ந்த கதி

குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டோருக்கு நேர்ந்த கதி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW