அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபர்! முன்னெடுக்கப்பட்ட விசாரணை
அம்பாறையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் போதைப் பொருளுடன் கைதான 34 வயது சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, குறித்த சந்தேக நபர் தொடர்பில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இவ்வாறு கைதான சந்தேக நபர் சம்மாந்துறை பகுதி புளக் ,ஜே கிழக்கு 03 பிரிவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
அத்துடன், சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |