இலங்கையில் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையில் நாட்டில் குழந்தை பிறப்புகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தை பிறப்புக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தரம் ஒன்றுக்காக சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிறப்புக்களின் எண்ணிக்கை
கடந்த காலங்களில் தரம் ஒன்றுக்கு சராசரியாக மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டதாகவும் தற்பொழுது இந்த எண்ணிக்கை ஐம்பதாயிரத்தினால் குறைவடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தரம் ஒன்றுக்கு 340000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போதிலும் தற்பொழுது 290000 மாணவர்களே சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் .
சுகாதார அமைச்சின் தகவல்களின் அடிப்படையிலும் குழந்தை பிறப்புக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் இவ்வாறு இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.