மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
Parliament of Sri Lanka
Sri Lanka
Government Of Sri Lanka
By Laksi
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வு
அந்த வகையில், 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |