மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சூரிய அஸ்தமன காட்சி

New York
By Chandramathi May 31, 2023 10:14 PM GMT
Chandramathi

Chandramathi

நியூயார்க்கின் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன், தங்களின் கையடக்கத் தொலைபேசிகளில் அதனை பதிவு செய்துள்ளனர்.

மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில், பிரமாண்ட சூரியன் அஸ்தமனமான காட்சியை மக்கள் பார்த்து இரசித்துள்ளனர்.

சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்றுள்ளது.

இதனால் மன்ஹாட்டனில் சூரியன் மறையும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.