தவறான முடிவு எடுப்பவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியட்டுள்ள தகவல்

Dr Ramesh Pathirana Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Aadhithya Jul 13, 2024 03:42 AM GMT
Aadhithya

Aadhithya

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, தவறான முடிவு எடுப்பவர்கள் பட்டியலில் இலங்கை இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பு விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தவறான முடிவு எடுக்கும் நாடாக இலங்கை இருந்ததாகவும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான நடவடிக்கைகள்

குறிப்பாக தவறான முடிவினை எடுக்க தூண்டும் காரணிகள் பல இருப்பதாகவும், அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தவறான முடிவு எடுப்பவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியட்டுள்ள தகவல் | Suicide Rates In Sri Lanka Update

மேலும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW