இலங்கையில் பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறும் உயிர் மாய்ப்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் தேசிய காயம் தடுப்பு வாரத்தின் போது இந்த புள்ளிவிவரம் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அவசர தேவை
இதேவேளை தவறான முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தவறான முடிவு தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசர தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.