பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்! 5 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் தற்கொலைப்படை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குரேஷி மூர் கிராமத்தில் நேற்று இரவு இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கிராமத்தலைவர் நூர் அகமது மெஷல் வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தாக்குதல்
இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சிக்கு உடலில் வெடிகுண்டுகளை மறைத்துக்கட்டிக்கொண்டு மர்ம நபர் வந்துள்ளார்.

அந்த நபர் திருமண நிகழ்ச்சியின் பலரும் நடனமாடிக்கொண்டிருந்த போது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.