சீனியைக் காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது!

Sri Lanka
By Nafeel May 14, 2023 03:00 PM GMT
Nafeel

Nafeel

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபர் நேற்று சனிக்கிழமை (13) காலை கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து சீனிப்பாணி நிரப்பப்பட்ட 263 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ''

தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று காலை வேப்பங்குளம் 8ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர்.

அதனையடுத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அந்த வீட்டில் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி (750 மில்லி லீற்றர்) மற்றும் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சில பொருட்களை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது,

சந்தேக நபர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.