வடக்கு - கிழக்கில் ஏற்பட்ட திடீர் மின்தடை : அவதிக்குள்ளான மக்கள்
By Raghav
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மின்தடை
இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றி இந்த மின்தடை ஏற்பட்டிருந்தது.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறே இத்திடீர் மின்தடைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.