ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 11, 2024 06:27 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நன்மதிப்பு மிக்க அரசியல்வாதியான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பாரியாராவார்.

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

அமைச்சுப் பதவி

பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே | Sudarshani Fernandopulle Joined Sjb

மேலும், பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.  

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW