அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Rice
By Laksi Nov 07, 2024 12:53 PM GMT
Laksi

Laksi

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணத்தை இன்று (07) வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை

இந்த நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு | Submission Of Rice Stock Report To Anura

அத்துடன் தற்போது சில்லறை சந்தையில் பேணப்பட்டு வரும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அவ்வாறே பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கணக்கெடுப்பு பணிகள் 

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் அரிசி இருப்புக்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு | Submission Of Rice Stock Report To Anura

இதனடிப்படையில், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ

முறைப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள நிஹால் தல்துவ

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW