மருதமுனை ஹம்றா வித்தியாலய மாணவி சுமையா தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

Education School Incident School Children
By Shalini Balachandran Aug 01, 2024 10:31 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்-ஹம்றா வித்தியாலய மாணவியான முஹம்மட் வலீத் பாத்திமா சுமையாவினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது இன்று பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இணைப் பாடவிதானதுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எம். சிரின்தாஜ், உதவி அதிபர்கள் மற்றும் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சாதனை மாணவியை மாலை அணிவித்து கெளரவித்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல்

வேலைத்திட்டங்கள்

அத்தோடு இம் மாணவி தேசிய ரீதியிலும் முதல் நிலை பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திட பாடசாலை சமூகம் சார்பாக அவர்கள் வாழ்த்தியதோடு, இதற்கு உறுதுணையாகவிருந்த வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர், கல்லூரியின் முதல்வர், பிரதி அதிபர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

மருதமுனை ஹம்றா வித்தியாலய மாணவி சுமையா தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு | Student Sumaiya Select National Level Competition

இவரது சகோதரியும், இவரும் கடந்த காலங்களிலும் பல்வேறு வலயமட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசியமட்ட சாதனைகளை நிலைநாட்டியவர்கள் என்பதுடன் பிராந்திய கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு வகையிலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் எம்.ஐ.எம். வலீத்தின் புதல்வியுமாவார்.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW