இலங்கையில் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Eastern Province Education
By Mayuri Jul 08, 2024 03:05 AM GMT
Mayuri

Mayuri

2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு

அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! கல்வி அமைச்சின் அறிவிப்பு | Student Loan

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW