வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்! ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது.
சர்வதேச விசாரணை வழியாக நீதி
அந்த ஊடக அறிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
2,700 நாட்களை கடந்தும் கடந்த 15 ஆண்டுகளாகவும் தெருவில் நின்று எம் பிள்ளைகளின் விடுதலைக்கும் நீதிக்குமாக தொடரும் போராட்டத்தை இலங்கை அரசாங்கத்தினால் ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது.
பன்னாட்டு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதையும் நாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |