சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Police Ampara Eastern Province Crime
By Laksi Dec 27, 2024 10:18 AM GMT
Laksi

Laksi

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை என அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமூகத்தில் எழுகின்ற குற்றச் செயல்களை தடுக்க பொலிஸார் பொதுமக்கள் உறவு அவசியம். அதற்கு மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுக்கள் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைதீவு பொலிஸ் பிரிவிற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழு கூட்டம் நேற்று (26) மாலை காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

பொதுமக்களின் ஒத்துழைப்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் பாதுகாப்பு உபதேச குழுக்களின் மூலம் பொலிஸார் பொதுமக்கள் நல்லுறுவு வலுப்பெறும் சமூகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிஸார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம்.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Strict Action Will Be Taken Against Smuggling

மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பொலிஸார் கடமையாற்றி வருகின்றனர். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100 வீதம் சாத்தியமாகாது.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

சட்ட விரோத செயற்பாடு

எனவே பொதுமக்கள் பொலிஸார் உறவு முக்கியானது.அத்துடன் உபதேச குழுவின் வகிபாகம் பாரியது. அதன் அதிகாரம் வரையறையற்றது. முழுப் பொலிஸ் நிலையத்தை கண்காணிக்க முடியும்.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Strict Action Will Be Taken Against Smuggling

சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் இப்பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.தங்கள் உயிர்ப் பாதுகாப்பில் பொலிஸாருக்கும் பங்குண்டு என்ற கடமை உணர்வுடன் எமது கடமையினை செய்கிறோம்.

இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும்.பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery